மொபைல் போனை தூக்கி போடுங்கள் ! நலத்தை கெடுக்கும் ரேடியேஷன் அபாயம் :
புதுடில்லி: பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை, அருள் இல்லார்க்கு
அவ்வுலகமில்லை என்பர் . இது போல் இன்றைய காலத்தில் போன் இல்லாதோருக்கு
முன்னேற்ற வழி இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நம்முடைய வாழ்வில்
வர்த்தக ரீதியில் மொபைல் போன் முழு அங்கமாகி விட்டது.
இந்த பயன்பாட்டினால் நமக்கு நன்மை என்றாலும் நம்மை அறியாமலே நமக்கு பெரும்
கேட்டினை ஏற்படுத்துகிறது என்பதை யாரும் மறந்து விடுகின்றனர். இதுவும்
இன்றைய இளைய தலைமுறையினர் சக நேரமும் ஏன் தூங்கும் போதுகூட நெஞ்சிலே வைத்து
தூங்குபவர்களும் உண்டு. குறிப்பாக காதலன்- காதலி உரையாடல் என்றால் அது
விடிய, விடிய போய்ச்சேரும் ( எடுத்துக்காட்டு பாலச்சந்தரின் அழகன்
திரைப்படம்) இவ்வாறு நம்மை ஆட்டுவிக்கும் மொபைல் போன் தரும் தீமைகள்
குறித்து மத்திய அரசே எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த
அறிவிக்கையில் மொபைல்போன் பயன்பாடு மற்றும் ரேடியேஷனில் இருந்து தப்பிக்க
வழி கூறியிருக்கிறது. இதன் விவரம் வருமாறு :
மூக்கு கண்ணாடி அணிபவரா நீங்கள் ? *
முதலில் நீங்கள் மொபைல் பேசாமல் இருந்தால் அலுவலகத்தில் இருக்கும் போது
தங்கள் உடலுடன் ஒட்டிய படி இல்லாமல் சற்று தள்ளி அதாவது மேஜை மீது வைப்பது
நல்லது. * போன் பேசும்போது ஸ்பீக்கர் போன் ஆன் செய்தோ அல்லது ஹெட்செட்
மூலமோ பேசிக்கொள்வது நல்லது. லேண்ட்லைன் போனாக இருந்தாலும் இது பொருந்தும்.
* நீண்டநேர அழைப்பை தவிர்ப்பதுடன் இதற்கு பதில் எஸ்.எம்.எஸ்., பகிர்ந்து
கொள்ளவும். * நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால் அதில் மெட்டல்
பிரேம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். பேசும் போது இதனை தவிர்ப்பது நல்லது. *
குளித்த நிலையில் ஈரத்தலையுடன் போன் பேசுவதை தவிர்க்கவும், காரணம் மெட்டல்
மற்றும் தண்ணீர் இரண்டுக்கும் ரேடியேஷன் சக்தியை இழுக்கும் அதிகம் சக்தி
கொண்டது. இதனை தவிர்ப்பதன் மூலம கெடுதலில் இருந்து தப்பிக்கலாம். பேசாமல்
இருக்கும்போது போன் உபகரணத்தை தனது உடலின்மீது படும்படியே அல்லது பேண்ட்
பாக்கெட்டிலே வைப்பதை தவிர்க்கலாம். காரணம் இந்த போன் ஒன்று அல்லது 2
நிமிடத்திற்கொருமுறை இது தனக்கான சமிக்ஞைகளை பெறுவதில் கூடுதல் சக்தியை
வெளிப்படுத்தி கொண்டேயிருக்கும்.
* போன் பேசும் போது ரேடியோ சிக்னல் வீக்காக இருந்தால் பேசாமல் இருப்பது
நல்லது, காரணம் இந்நேரத்தில் இந்த போன்கள் தனது சிக்னலை பெறுவதற்கும்
ஒளிபரப்பு தன்மையை அதிகரிக்கவும் கூடுதல் செயல்பாட்டில் இருக்கும்.
மொத்தத்தில் போன் பேசுவதை குறைத்து எச்சரிக்கையாக வாழ்வது நல்லது.
காக்கை , குருவிகள் மடிந்தன: இன்றைய
உலகில் வானில் பறவைகளை÷யே காண முடியவில்லை. இந்த மொபைல் டவர் வெளியிடும்
கண்ணுக்கு தெரியாத அலைகள் பல்வேறு பறவைகளை அழித்து வருகிறது.
சிட்டுக்குருவி முழுமையாக முடிந்து போனது. காகத்திற்கு சோறு போட
வேண்டுமானால் பல மணி நேரம் மொட்டை மாடியில் காத்திருக்க வேண்டியதாக
இருக்கிறது. கா, கா என்று அழைத்தாலும் வர மறுக்கிறது. காரணம் எண்ணிக்கை
வீழ்ச்சியில் இருக்கிறது என்பதே ! கூரையில் சோறு போட்டால் ஆயிரம் காக்கை
என்ற பழமொழி எல்லாம் மறந்து விட வேண்டியதுதான். காக்கை , குருவிகள் கழுகு,
பருந்து உள்ளிட்டவை அழிந்து வரும் நிலையிலல், மனிதர்கள் இதனை விட கூடுதல்
பலம் இருப்பதால் அதிக கெடுதல் விரைவில் தாக்காமல் இருக்கிறது என்பதுதான்
உண்மை ! நீங்கள் இனி எப்படி மொபைல் போன் பேசப்போகிறீர்கள் ? http://siddharkuberavasiyam.blogspot.
No comments:
Post a Comment